வேலைவாய்ப்பு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

தினமணி

3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதற்கு  2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்,வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல், அறிவியல், உயிரிவேதியியல், நுண்உயிரியல், மனை அறிவியல், தெலுங்கு, உடற் பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு - 1) ஆகிய 17 பாடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 http://www.trb.tn.nic.in  -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம் குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT