வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொது குறைகள் மற்றும் பென்ஷன்  துறைகளில் வேலை

தினமணி

மத்திய அரசின் பொது குறைகள் மற்றும் பென்சன் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்வை எஸ்.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 577 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 66 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணி: டெக்னிக்கல் சூப்பிரன்டெனட், ஒர்க்‌ஷாப் சூப்பிரண்டென்ட், சீனியர் இன்ஸ்ட்ரக்டர், மெடிக்கல் அட்டென்ட், லேடி மெடிக்கல் அட்டென்ட், கன்சர்வேசன் அசிஸ்டன்ட், ஜூனியர் கன்சர்வேசன் அசிஸ்டன்ட்

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் கைத்தறி தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெக்கானிக்கல், டெக்ஸ்டைல், சிவில் போன்ற துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், புள்ளியில், கணிதவியல், பொருளாதாரம், சோசியாலஜி, சோசியல் ஒர்க் போன்ற துறையில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: தமிழக விண்ணப்பதாரர்கள் www.sscsr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை கணினிப் பிரதி எடுத்து சம்மந்தப்பட்ட மண்டலங்களின் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மற்றவர்கள் அந்தந்த மண்டல எஸ்எஸ்சி இணையதள பக்கங்கள் வழியாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in அல்லது www.sscsr.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெர்ந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT