தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை
என்பிசிசி என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 96 பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது
என்பிசிசி என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 96 பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், திட்ட மேலாளர், முதுநிலை திட்ட அதிகாரி, உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ., எம்.பி.ஏ., முதுநிலை இந்தி-ஆங்கிலம், சிவில், எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
அதிகபட்சம் 49 வயதுடையவர்களுக்கு இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனியான வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தனிநபர் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.9.2017-ஆம் தேதியாகும்.