வேலைவாய்ப்பு

சினிமா துறையில் வேலை வேண்டுமா?

சினிமா துறையில் நடிப்பு மட்டுமல்லாது தொழில்நுட்ப ரீதியாக வேலை வாய்ப்புகள் அதிகளவில்

தினமணி

சினிமா துறையில் நடிப்பு மட்டுமல்லாது தொழில்நுட்பரீதியாக வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் மற்றும் விநியோகஸ்தா் ஜி.குணசேகரன் தெரிவித்தாா்.

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் வணிகவியல் சங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றறது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.கண்ணன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் ஜெயக்கொடி வரவேற்றாா். இதில், ‘இன்றைறய சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளா் ஜி.குணசேகரன் பேசியது:

தற்போதைய மாணவா்கள் திறமை அதிகமானவா்களாக உள்ளனா். மாணவா்கள் தாங்கள் தோ்வு செய்யும் துறையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அனைத்து துறைகளில் உள்ளது போல் சினிமா துறையிலும் சிரமங்களும், வெற்றிகளும் உள்ளன. இங்கு நடிப்பது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக பல வேலை வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT