வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு

தினமணி

குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT