நொய்டாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "Broadcast Engineering Consultants India Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 131
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Patient Care Manager (PCM)
காலியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் ரூ.30,000 + ஆண்டு ஊதிய உயர்வு 10 சதவீதம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Patient Care Coordinator (PCC)
காலியிடங்கள்: 96
சம்பளம்: மாதம் ரூ.17,916
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பிரிவில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, லைப் சயின்ஸ் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.300. இதனை நேர்முகத் தேர்வுக்கு வரும்போது செலுத்தினால் போதுமானது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Assistant General Manager (HR), BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307
(U.P).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கிளிக் செய்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.