பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள 6 துணை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Engineer
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 31.03.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr Dy General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad - 500076”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.in/DocumentViews.aspx?fileName=01_DE_ON_STB_WEB_AD.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.