வேலைவாய்ப்பு

தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் வேலை: டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: DRAUGHTSMAN, GRADE-III

காலியிடங்கள்: 53

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 01.17.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகளை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: நகர திட்டமிடல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது கட்டடக்கலை துறையில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழியில் போதுமான அளவில் அறிவு பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது. 

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, மதுரை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2018

மேலும் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்மாண்டு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா!

17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

எரியும் நேபாளம்! ஒரே விமான நிலையமும் மூடல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 96% வாக்குப்பதிவு!

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

SCROLL FOR NEXT