வேலைவாய்ப்பு

தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் நிறுவனத்தில் அதிகாரி வேலை

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தில் (எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ்

தினமணி


மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தில் (எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன்) சோசியல் செக்யூரிடி அதிகாரி, கிரேடு 2 மேலாளர், சூப்பரண்டென்டண்ட் பிரிவுகளில் காலியாக உள்ள 539 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Social Security Officer/ Manager Gr-II/ Superintendent

வயது வரம்பு: 05.10.2018 தேதியின் அடிப்படையில் 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவதொரு பிரிவில் பட்டம் (வணிகவியல், மேலாண்மை,சட்டம்) பெற்றிருப்பதுடன் கூடுதலாக கணினி தொடர்புடைய தகவல்கள் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.10.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT