முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் BECIL-ல் நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி 

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் என அழைக்கப்படும் பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால

Updated On : 19 ஆகஸ்ட், 2019 at 3:03 PM
பகிர்:

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் என அழைக்கப்படும் பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 50 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரு தினங்களே உள்ளன. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

மொத்த காலியிடங்கள்: 50 

பணி: Staff Nurse (Grade-A)

Advertisement

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் நர்சிங் பாடப்பிரிவில் ஏ கிரேடு அளவிலான பட்டப்படிப்பை முடித்து நர்ஸ் மற்றும் மிட்வைபரி ஆக நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகதேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 

விண்ணப்பிக்கும் முறை:  www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: 
Deputy General Manager (HR) in BECIL's Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P). 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/EDMC31july19pdf-f09f85eda761af07af0226d4d4e39645.pdf என்ற லிங்கை கிளிக் செங்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.