முகப்பு
வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை வேண்டுமா? 

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் நிறுனத்தின் சென்னையில் காலியாக உள்ள 80 பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் நிறுனத்தின் சென்னையில் காலியாக உள்ள 80 பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 80

பணி: Engineer (FTA-Civil) - 21
சம்பளம்: மாதம் ரூ.62,100

பணி: Supervisor (FTA-Civil) - 59
சம்பளம்: மாதம் ரூ.34,680

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிபளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bhelpssr.co.in or https://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Addl.General Manager(HR) BHEL, Power Sector Southern Region, 690, EVR Periyar Building, Anna Salai, Chennai-600035.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://intapp.pssr.bhel.com:9082/FTA_Recruitment_Civil/FTA_Civil_2019_Advertisement_Eng.pdf என்ற லிங்கை சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.