வேலைவாய்ப்பு

கொச்சி ஷிபியார்ட்டில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

கப்பல் கட்டு நிறுவனமான கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


கப்பல் கட்டு நிறுவனமான கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)

மொத்த காலியிடங்கள்: 671

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Fabrication Assistants - 47
சம்பளம்: மாதம் ரூ.18,400
பணி: Outfit Assistants - 543
பணி: Scaffolder - 19
பணி: Aerial Work Platform Operator  - 02    
சம்பளம்: மாதம் ரூ.17,400
பணி: Semi-Skilled Rigger - 40
பணி: General Worker - 20    
சம்பளம்: மாதம் ரூ.13,700

தகுதி: IV, VII ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ITI மதிப்பெண், NAC மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் Vacancy Notification என்ற அறிவிப்பில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT