வேலைவாய்ப்பு

LIC Assistant Jobs Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்! 

தினமணி


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு 2019 அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு www.licindia.in என்னும் எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கான செயல்முறையின் மற்ற அனைத்து நிபந்தனைகளில் மாற்றம் இல்லை என்பதை விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது. 

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்ற இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம். 

மேலும் விவரங்கள் அறிய https://www.licindia.in/getattachment/Bottom-Links/Recruitment-of-Assistants-2019/Revised-Exam-dates.pdf.aspx?_ga=2.115787974.198813663.1570708793-464317252.1570079021 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT