வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? பட்டதாரிகளுக்கு மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை

தினமணி



சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 141 நிர்வாகி, தொழில்நுட்ப உதவியாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களுக்கான நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள்: 141 

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்: 

பணி: நிர்வாகி - 62
தகுதி: பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பட்டய கணக்காளர் (சி.ஏ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 48
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

பணி: மேலாண்மை டிரெய்னி - 31 
தகுதி: எம்.எஸ்சி வேதியியல், கணினி அறிவியல், பி.இ. கணினி அறிவியல், பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, எம்.காம், பட்டய கணக்காளர் (சி.ஏ) முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 25 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.madrasfert.co.in அல்லது https://recruitment.madrasfert.co.in/landing என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT