வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான

தினமணி


ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Supervisor (Security)

காலியிடங்கள்: 51

வயதுவரம்பு: 15.02.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 22,371

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெர்றிருக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:  www.airindia.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi - 110 037.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/868_1_Supervisor-Security-Feb-2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2020
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT