வேலைவாய்ப்பு

மத்திய அரசில் அதிகாரி, உதவியாளர் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

தினமணி


மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்தியா பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Data Processing Assistant - 02

தகுதி: Computer Application, Information Technology, Computer Science போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது மேற்கண்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Deputy Central Intelligence Officer technical) - 27

தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், மென்பொருள் பொறியியல் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர்  கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்துப தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT