வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை: 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது

ஆர். வெங்கடேசன்

 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Professors, Associate Professors, Professors

காலியிடங்கள்: 32

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: வேதியியல், மானிடவியல், இந்திய வரலாறு, தெற்கு மற்றும் தெற்கு கிழக்கு ஆசிய ஆய்வுகள், கனிம வேதியியல், புவியியல், இந்திய இசை, உளவியல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் மற்றும் பொதுநிர்வாகம், உயிர் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறையில் யுஜிசி விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், அதிகப்படியான கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது டி.டி.யாக எடுத்து செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai - 600 005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/miscelloneous/appointments/instructions.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT