சிவில் முடித்தவர்களுக்கு ஊராட்சித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஏற்பட்டுள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புசிவில் முடித்தவர்களுக்கு ஊராட்சித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஏற்பட்டுள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஏற்பட்டுள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: திண்டுக்கல்
பணி: Junior Drafting Officer
காலியிடங்கள்: 26
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncs.gov.in, www.dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 154, மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரகம் - 624005, திண்டுக்கல்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.11.2020.
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/11/2020110612.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.