முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதியதாக 162 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதியதாக 162 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதியதாக 162 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 04/2020
அறிக்கை எண். 1695/2020

மொத்த காலியிடங்கள்: 162

பணி: Junior Assistant - 74 +1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,400
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான  தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: Typist - 78 + 10
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை அல்லது ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை தேர்ச்சி அல்லது ஆங்கிலம் தட்டச்சில் மேல்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 31.10.2020 தேதியினபடி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும் ஓசி பிரிவினர் மட்டும் பதிவுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: tanuvas1.ucanapply.com,   http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2020

முழு கட்டுரையைப் படிக்க →