வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவனங்களில் வேலை

தினமணி


கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்தவர்கள், புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, எச்ஏஎல் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
பணி: Data Analyst - 05
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு அல்லது தரவு புள்ளிவிவர உளவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  
அனுபவம்: வணிக வங்கிகள்,  நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பொருளாதார அளவீடுகள் நிதி களத்துடன் கூடிய நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Specialist in Forensic Audit- 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது எம்பிஏ (நிதி) முடித்திருக்க வேண்டும். மேலும் தடயவியல் கணக்கியல் மற்றும் மோசடி கண்டறிதலில் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி அனுபவம்: தடயவியல் தணிக்கை மற்றும் மத்திய,மாநில அளவிலான துறைகளில் தடயவியல் தணிக்கைக் குழுவின் ஒரு பிரிவில் சிறப்பு பணி அனுபவத்துடன் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Accounts Specialist - 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது நிறுவனத்தின் செயலாளர் அல்லது சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு:  30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி  அனுபவம்: வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கருவூலங்களில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  05.09.2020  மாலை 6 மணி வரை
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற முழுமையான விவரங்களை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3846 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்
பணி: Diploma Technician
காலியிடங்கள்: 11 
காலியிடங்கள் பிரிவு: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்
பணியிடம்: சென்னை தாம்பரம் தமிழ்நாடு.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://meta-secure.com/hal-overhall20/pdf/NOTIFICATION%20-DIP-TENURE%20BASIS%2014082020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT