நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு
வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 307
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Dragline Operator (Traninee) - 09
பணி: Dozer Operator (Trainee) - 48
பணி: Grader Operator (Trainee) - 11
பணி: Dumper Operator (Trainee) - 167
பணி: Shovel Operator (Trainee) - 28
பணி: Pay Loader Oprator (Trainee) - 06
பணி: Crane Operator (Trainee) - 21
பணி: Drill Operator (Trainee) - 17
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.1034 வழங்கப்படும்.
Advertisement
வயதுவரம்பு: 30.03.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிட்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2020