NBCCL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் .05/2021
பணி: Site Inspector (Civil)
காலியிடங்கள்: 80
பணி: Site Inspector (Electrical)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.