வேலைவாய்ப்பு

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர

தினமணி

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை. வழக்குத் துறை 

தேர்வு நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

பணி: Assistant Public Prosecutor 

மொத்த காலியிடங்கள்: 50 

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,75,500 வழங்கப்படும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  
விண்ணப்பிக்கும் முறை :  www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். தெளிவான விவரங்கள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021 

மேலும் விவரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf ZVdJ என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT