வேலைவாய்ப்பு

ரூ.56,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலியிடங்கள்: 197

பணி மற்றும் காலியிடங்கள் விவம்: 

பணி: Assistant Director of Horticulture
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: Horticultural Officer
காலியிடங்கள்: 169
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

தகுதி: தோட்டக்கலை பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் மற்றும் விதவைகள் பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

பதிவுக் கட்டணம்: ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். ஒருமுறை பதிவுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் . 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/03_2021_ADH%20&%20HO_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலாசாரம், புவியியல், மத எல்லைகளைக் கடந்தது தியானம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்: பிஎஃப்ஐ மீது என்ஐஏ குற்றச்சாட்டு

ஊரக வேலைத் திட்ட ஊதியம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்: ப.சிதம்பரம்

தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி தாக்கு!

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டதை சரிபாா்க்க வேண்டும்: மாவட்டச் செயலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT