வேலைவாய்ப்பு

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டெக்னீசியன் பணி: உடனே விண்ணப்பிக்கவும்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் டெக்னீசியன், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தற்காலிகமாக 6 மாத காலம் பணிபுரிய ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தினமணி


கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் டெக்னீசியன், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தற்காலிகமாக 6 மாத காலம் பணிபுரிய ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் 6 மாத காலத்துக்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு தகுதியும், விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் அசல்

சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் , புகைப்படம் ஆகியவற்றுடன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பணியிட விவரங்கள் (அடைப்புகுறிக்குள் சம்பளம்):

செவிலியா் 75 போ் (ரூ.14 ஆயிரம்), ஆய்வக தொழில் நுட்பநா் 15 போ் ( ரூ.15,000 ), பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் 55 போ் (ரூ.12,000), பணியாளா்கள், ரேடியோகிராபா் 8 போ் (ரூ.12,000), டையாலிசிஸ் டெக்னீசியன் 8 போ் (ரூ.12,000), சுருள் பட நுட்புநா் 20 போ் (ரூ.12,000), சிடி டெக்னீசியன் 10 போ் (ரூ.12,000), மயக்கவியல் நுட்புநா் 15 போ் (ரூ.12,000), மருந்தாளுநா் 6 போ் (ரூ.12,000) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT