இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 எஸ்எஸ்சி அதிகாரி (பொது சேவை), ஹைட்ரோகிராபி தனித்துவமான படிப்புகளுடனான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத தகுதியான பொறியியல் பட்டதாரிஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.
நிறுவனம்: இந்திய கடற்படை
மொத்த காலியிடங்கள்: 50
பணி : SSC General Service (GS/X) - 47
பணி : Hydro Cadre - 03
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 02.01.1997 முதல் 01.07.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400
விண்ணப்பிக்கும் முறை : https://www.joinindiannavy.gov.in/en/event/naseem-al-bahr-2016-visit-of-royal-navy-of-oman-ships.html எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பத்தாரர்களின் மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இரண்டு தனித்துவமான படிப்புகளில் ஒன்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_3_2122b.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2021