வேலை வேண்டுமா? அழைக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chartered Accountant
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000 வழங்கப்படும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000+ஜிஎஸ்டி 18% ரூ.1180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021
மேலும் விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.