வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக அரசில் 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணியிடத்திற்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வ

தினமணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணியிடத்திற்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC) 

மொத்த காலிப் பணியிடங்கள் : 141 

பணி: பட்டியல் எழுத்தர் - 54 
தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலை அறிவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 2,410 + அகவிலைப்படி

பணி:  Assistant - 52 
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி

பணி: Security, Watchman - 35 
தகுதி:  8 ஆம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32,37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : திருச்சி மாவட்டத்தினை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.11.2021

மேலும் விபரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT