newbhel063825 
வேலைவாய்ப்பு

BHEL நிறுவனத்தில் பொறியாளர், சூப்பர்வைசர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். PSER-01/2021

பணி: Engineer (FTA-Civil) 

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.71,400 

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Supervisor (FTA-Civil) 

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.39,670

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க  வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்பிஐ கலெக்ட் அல்லது BHEL PSER Kolkata  என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://pser.bhel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி இணைத்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Deputy General Manager(HR), BHEL, Power Sector Eastern Region, BHEL Bhawan, Plot No.DJ-9/1,Sector-II, Salt Lake City, Kolkata - 700 091

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.10.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT