வேலைவாய்ப்பு

ரூ.44,900 சம்பளத்தில் இஎஸ்ஐசி-யில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Social Security Officer, Manager Gr-II, Superintendent பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக

தினமணி

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Social Security Officer,
Manager Gr-II, Superintendent பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 93

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Social Security Officer
பணி: Manager Gr-II
பணி: Superintendent

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், சட்டம், மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும். கணியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினித் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை:  www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2022

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

SCROLL FOR NEXT