வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 613 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பொறியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தினமணி


ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பொறியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 613

அறிவிப்பு எண். 10/2022

மொத்த காலியிடங்கள்: 626

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

பணி: இளநிலை மின் ஆய்வாளர் - 08
பணி: உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66
பணி: உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) - 33
பணி: உதவி இயக்குநர்ஷ்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18
பணி: உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) - 01
பணி: உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) - 1+ 307
பணி: முதலாள்  - 07
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 11
பணி: உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 93
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,38,500
பணி: உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64
பணி: உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) - 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
வயதுவரம்பு:
01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. 

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணமாக ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 26.06.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT