வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 86

பணி: ஓட்டுநர் 
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

பணி: அலுவலக உதவியாளர்
தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: இரவு காவலர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஒட்டத்தெரிந்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

மாவட்ட வாரியான காலிடங்கள் விவரம்: 
சிவகங்கை - 6, திருவண்ணாமலை - 5, வேலூர் - 5, கள்ளக்குறிச்சி - 7, ராமநாதபுரம் - 3, புதுக்கோட்டை-7, மதுரை - 4, திருப்பூர் - 5, ஈரோடு- 5, காஞ்சிபுரம் - 4, சென்னை - 4, நாகப்பட்டினம் - 5, மயிலாடுதுறை - 6, திண்டுக்கல் - 2, திருச்சிராப்பள்ளி - 9, தூத்துக்குடி - 5.

வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது  21, 22, 25, 26, 28,29, 30க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற லிங்கில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

SCROLL FOR NEXT