வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Peons (Subordinate Cadre)

காலியிடங்கள்: 16

மாவட்ட வாரியான காலியிடங்கள்: 
1. செங்கல்பட்டு - 02
2. சென்னை - 11
3. விழுப்புரம் - 01
4. புதுச்சேரி - 02

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். 

வயதுவரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் ஆங்கிலத்தில் படிக்க, எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Circle Head IHRD). Punjab National Bank, Circle Office Chennai South, PNB Towers, 2nd Floor, No. 46-49, Royapettah High Road, Royapettah, Chennai -600014

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

SCROLL FOR NEXT