வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில்(என்எல்சி) 550 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில்(என்எல்சி) 550 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விளம்பர எண். L&DC.03/2021

பணி: Graduate Apprentice 

காலியிடங்கள்: 250

துறைவாரியான காலிடங்கள் விவரம்:
1. Electrical & Electronics Engineering - 70
2. Electronics & Communication Engineering - 10
3. Instrumentation Engineering - 10
4. Civil Engineering - 35
5. Mechanical Engineering - 75
6. Computer Science and Engineering - 20
7. Chemical Engineering - 10
8. Mining Engineering - 20

உதவித்தொகை: மாதம் ரூ.15,028

தகுதி: பொறியியல் துறையில்  சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technician(Diploma) Apprentices

காலியிடங்கள்: 300

துறைவாரியான காலிடங்கள் விவரம்:
1.  Electrical & Electronics Engineering - 85
2. Electronics & Communication Engineering - 10
3.  Instrumentation Engineering - 10
4. Civil Engineering - 35
5. Mechanical Engineering - 90
6. Computer Science and Engineering - 25
7. Mining Engineering -30
8. Pharmacy - 15

உதவித்தொகை: மாதம் ரூ.12,524

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Learning & Development Centre, NLC India Limited, Block-20, Neyveli - 607803.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/GAT-TAT%20Online%20notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT