வேலைவாய்ப்பு

ரூ.58,600 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி



இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், 
டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூய்மை பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 66

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: தட்டச்சர் - 02
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: டிக்கெட் விற்பனையாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: காவலர் 
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: தூர்வை
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

பணி: தூய்மை பணியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி, 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேசுவரம்- 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2022

இதற்கு விண்ணப்பிக்கலாம் | 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT