வேலைவாய்ப்பு

ராணுவத்தில் குரூப் 'சி' வேலைவாய்ப்பு அறிவிப்பு: 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பகப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Steno Grade II - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்தில் மொழி மாற்றம் செய்து கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: LDC - 08
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தியன் சமையலில் அறிவுத்திறனும், திறமையும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS (Daftary) - 01
பணி: MTS (Messenger) - 14
பணி: MTS (Safaiwala) - 05
பணி: MTS (Chowkidar) - 02

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு புணேயில் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: www.hqscrecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2022

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT