வேலைவாய்ப்பு

டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தினமணி

 
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.Rectt./03/2022

மொத்த காலியிடங்கள்: 79

பணி: டெக்னீசியன்(1)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் - 17
2. எலக்ட்ரிக்கல் - 17
3. இன்ஸ்ட்ருமென்டேசன் -11
4. கம்ப்யூட்டர் - 11
5. பிட்டர் - 05
6. சிவில் - 04
7. வெல்டிங் - 04
8. மெஷினிஸ்ட் - 03
9. மெக்கானிக் - 01
10. டூல் டை மேக்கர் - 01
11. டீசல் மெக்கானிக் - 01
12. டர்னர் - 01
13. சீட் மெட்டல் - 01
14. கிளாஸ் பிளவர் - 01
15.  ஏ.சி - 01

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

கல்வித்தகுதி : குறைந்தது 55% மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 03.07.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. கட்டணத்தை தில்லியில் மாற்றத்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Director, National Psysical Laboratory என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பித்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.nplindia.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110 012.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 03.07.2022

மேலும் விவரங்கள் அறிய www.nplindia.org/index.php/recruitments/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT