வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக காவல்துறையில் 444 உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தினமணி


தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்:01/2022 தேதி: 08.03.2022

மொத்த காலியிடங்கள்: 444

பணி: Sub-Inspectors of Police (Taluk) - 399

பணி: Sub-Inspectors of Police (AR) - 45

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ் தகுதித் தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனிலே செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2022

மேலும் விபரங்கள் அறிய https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

SCROLL FOR NEXT