வேலைவாய்ப்பு

ஆவடி ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் (ஒசிஎஃப்) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் (ஒசிஎஃப்) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். 1810/LB/57-TA/2022 

பணி: தொழில் பழகுநர் பயிற்சி

மொத்த காலியிடங்கள்: 180

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1.Non - ITI Category - 72
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கனிதம், அறிவியல் பாடத்தில் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.6000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.6,600 வழங்கப்படும்.

2. ITI Category - 108
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 
உதவித்தொகை:  முதலாம் ஆண்டு மாதம் ரூ.6,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,700 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை General Manager, Ordnance Clothing Factory, Avadi என்ற பெயரில் டி.டி. ஆக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்த்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் டி.டி.யை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Ordnance Clothing Factory (AUnit Of Troop Comforts Limited) Agovernment of India Enterprise, Avadi, Chennai - 600 054.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.2022
    
மேலும் விவரங்கள் அறிய https://troopcomfortslimited.co.in/  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT