வேலைவாய்ப்பு

தமிழக சுகாதாரத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் சுகாதார மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு

தினமணி


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் சுகாதார மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்: 

பணி: மாவட்ட ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: சமூகபணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,000

பணி: உளவியலாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,000 

பணி: தரவு உள்ளீட்டாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி:  பொது சுகாதாரம், சமூகபணியாளர், மேலாண்மை, சமூகவியல், மனநலவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் மற்றும் கணினி குறித்த அறிவு பெற்றிருப்பவர்கள் தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாகப்பட்டினம். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/03/2022031640.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT