வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருக

தினமணி

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில், 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை இரு நாள்களுக்கு முன்பு தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார்.  இதற்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி குரூப் 4 தேர்வுக்கான பணி வாரியான காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 7301

1. கிராம நிர்வாக அலுவலர் - 274
2. இளநிலை உதவியாளர் - 3590 + 3
3. இளநிலை உதவியாளர்(பிணையம்)  - 88
4. வரித் தண்டலர், நிலை-I - 50
5. தட்டச்சர் - 2089 + 39
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

6 சுருக்கெழுக்கு தட்டச்சர் (நிலை-III) - 885 +39
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

7. பண்டகக் காப்பாளர் (தமிழக்ம் விருந்தினர் இல்லம் உதகமண்டலம்) - 01
சம்பளம்: மாதம் ரூ. 16,500 - 66,000

8. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64
9. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) - 30+4
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

10. வரி தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 49
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 60,800

11. சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை -III) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 07
சம்பளம்: மாதம் ரூ. 20.600 - 75,900

தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருந்தால் போதுமானது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு: குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் 100 கேள்விகள்என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.07.2022.

தேர்வு காலம்: முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை. 

தேர்வு முடிவுகள்: அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT