வேலைவாய்ப்பு

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு பிற்பட்டோர், சிறுபான்மை நலத்துறையில் வேலை

திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

தினமணி


திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பகுதிநேர தூய்மைப் பணியாளர்

காலியிடங்கள்: 18 (ஆண்கள்-10, பெண்கள்-8)

சம்பளம்: மாதம் ரூ.3,000

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!

கண்கள் நீயே... மாளவிகா மனோஜ்!

அந்தி மாலை நேரம்... ஷெரின்!

பேன்ட் பாக்கெட்டில் போன்... மடியில் லேப்டாப் வைத்தால்? -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

SCROLL FOR NEXT