வேலைவாய்ப்பு

பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ( சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 540 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ( சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 540 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 540

பணி:  உதவி ஆய்வாளர் (ஸ்டெனோகிராபர்) - 122
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: தலைமைக் காவலர் (மினிஸ்டெரியல்) - 418 
தகுதி: கணினியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 25.10.2022 தேதியின்படி 18 முதல் 2க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 25.10.2022

மேலும் விவரங்கள் அறிய  cisfrectt.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT