இந்திய தர நிர்ணய மையம் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?இந்திய தர நிர்ணய மையத்தில் சயின்டிஸ்ட் பணி!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தர நிர்ணய மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட்-பி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தர நிர்ணய மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட்-பி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சயின்டிஸ்ட் - பி

பிரிவு: வேதியியல்

காலியிடங்கள்: 2

பிரிவு: சிவில் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 6

பிரிவு: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

காலியிடங்கள்: 7

வயதுவரம்பு: 16.8.2024 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கேட்-2022, 2023, 2024 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்று நெட்-2022, 2023, 2024 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட், நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

SCROLL FOR NEXT