தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் கோப்புப்படம்
வேலைவாய்ப்பு

திருவாரூரில் டிச.20 இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20- ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Din

திருவாரூா்: திருவாரூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20- ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞா்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் நோக்கில், திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறிய அளவிலான முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா்.

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ, செவிலியா் படிப்பு வரை படித்தவா்கள், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலை நாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் தங்களின் சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயனடையலாம்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, முகாமுக்கு வரும்போது எடுத்து வர வேண்டும்.

பைசன் காளமாடன் முதல் பாடல் அப்டேட்!

ஹிமாசல் கனமழை: யாத்திரை சென்ற 10 பேர் பலி! 6,000 பக்தர்கள் மீட்பு!

டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

SCROLL FOR NEXT