வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். FTA01/2024

பணி: Welder

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.42,500

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎக்ஸ்எஸ் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

BHEL PSSR, BHEl Integrated Office Complex, TNEB Road, Pallikaranai, Chennai-600 100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT