நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
வேலைவாய்ப்பு

காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant

காலியிடங்கள்: 500. மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தைச் சார்ந்த மொழியில் எழுத பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன்வழித் தேர்வு. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரம், தேர்வு நுழைவுச் சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

முதல்நிலைத் தேர்வு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.11.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT