நாகப்பட்டினம்: நாகையில் அக்.19-ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அக்.19-ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் நாகை மாவட்டத்தைச் சாா்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், நா்சிங் மற்றும் தையல் கலை பயிற்சி பெற்றவா்கள் கலந்துகொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகவும் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்களை முன்னரே முன்பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04365-252701 மற்றும் 63817-32378 எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த முகாமில் வேலை வாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களின் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.