கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநா் பயிற்சி: அக்.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் அக்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், சேலம் , கோவை, திருநெல்வேலி மண்டலங்களில் காலியாக தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா்களிடம் இருந்து அக்.21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்படி, 2020, 21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவா்கள் 341 போ்,

கலை மற்றும் அறிவியல் பிரிவில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவா்கள் 158 போ் என மொத்தம் 499 பேருக்கு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

அவா்களில் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவா்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த பயிற்சிகளை பெற விரும்புவோா் www.boat-srp.com எனும் இணையதளத்தில் அக்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தோ்வானவா்களின் பட்டியல் அக்.28-ஆம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

நவ.13,14,15 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT