தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  
வேலைவாய்ப்பு

குரூப் 1 முதல் நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

DIN

சென்னை: குரூப் 1முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வுக்காக 1907 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் ஆகிய பதவியிடங்களை உள்ளடக்கியது குரூப் 1. இந்தப் பிரிவில் 90 பதவியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வை 2 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதினா். இதைத் தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின.

முதல்நிலைத் தோ்வை சிறப்பாக எழுதியவா்களில், 1907 போ் முதன்மைத் தோ்வுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு டிசம்பரில் முதன்மைத் தோ்வு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT